General04 August 2026

நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

இன்று (04) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி நுவரெலியா - நோர்டன் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன், கென்யொன் பகுதியில் 234.6 மில்லிமீற்றரும், லக்ஷபான பகுதியில் 208.4 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes