தெஹிவளை, கடவத்த வீதியில் அமைந்துள்ள தஹநாயக்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்றிரவு வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இரவு 8.10 மணியளவில் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரில் ஒருவரே குறித்த தாக்குதலை நடத்த முயன்றுள்ளார் எனக் கூறினார்.
இருப்பினும், துப்பாக்கி இயங்காததால் உடனடியாகச் செயற்பட்ட வெதுப்பக உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் போராடி துப்பாக்கியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி மற்றும் உந்துருளியை செலுத்தி வந்தவரைக் கைது செய்வதற்காக தெஹிவளை காவல்துறையினர் 2 விசேட காவல்துறை குழுக்களை நியமித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்வு!
Local
05 August 2026
முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
05 August 2026
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
Local
05 August 2026
கம்பஹாவுக்கு அருகில் தொடருந்து பாதையில் உடலம் மீட்பு: பிரதான வீதியூடான தொடருந்து சேவைகள் தாமதம்!
Local
05 August 2026
சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான கையூட்டல் வழக்கு செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு
Local
05 August 2026
கண்டி, கேகாலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
Local
05 August 2026
இன்று 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
Local
05 August 2026
இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க இன்று உலக தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுகிறார்
Local
05 August 2026
கலிபோர்னியாவில் டிரம்ப் வருகைக்கு முன் பரபரப்பு: கோல்ஃப் மைதானத்தில் சந்தேக நபர் கைது
Local
05 August 2026
பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார் : திரையுலகம் இரங்கல்!
Local
05 August 2026