General05 August 2026

சீனாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிமுகம்

சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம், 2026 ஜூலை 31ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரகச் சேவைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த புதிய இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தூதரகச் சேவைகளைப் பெற விரும்புவோர்  https://www.emb-beijing.gov.lk/en என்ற இணையதள முகவரியின் மூலம் புதிய இணையதளத்தை அணுகலாம் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes