மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையால், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை - ரொசெல்ல பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலை அலுவலகத்தின் நிறைவேற்று பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒருவழி பாதையில் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாகவும் , ஹட்டன் முதல் கித்துல்கல வரை பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், ஹட்டன் - போர்டைஸ் வழியாக டயகம செல்லும் வீதியின் எல்பின் தோட்டம் பகுதியில் பாரிய பாறை ஒன்று சரிந்து வீதியில் வீழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், அக்கரபத்தனை பிரதேச சபை, பிரதேச மக்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் ஒத்துழைப்புடன் பாறை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (06) முதல் அந்த வீதியில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.
Latest News
கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்
Local
08 August 2026
எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!
Local
08 August 2026
இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!
Local
08 August 2026
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!
Local
08 August 2026
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!
Local
08 August 2026
கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு
Local
08 August 2026
சக வீராங்கனையுடன் தொடர்பு: அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி மீது முன்னாள் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு!
Local
08 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Local
08 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!
Local
08 August 2026
பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்
Local
08 August 2026