General07 August 2026

பல்லேகலை – தும்பர போகம்பர சிறைச்சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு

கண்டி, பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பர போகம்பர சிறைச்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் இன்று (07) காலை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையில், இலங்கை காவல்துறை, இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) ஆகியன இணைந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, தும்பர போகம்பர சிறைச்சாலைக்கு செல்லும் பிரதான மற்றும் உப வீதிகளில் விசேட காவல்துறை வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes