நீர்கொழும்பு, தளுபொத - பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறைச்சாலையின் கட்டடங்கள் அல்லது ஏனைய அரச சொத்துகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (7) நள்ளிரவு 12 மணியளவில் சிறைச்சாலை வளாகத்தின் நிலைமை முற்றாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதுடன், பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மேலதிக பாதுகாப்புப் பிரிவினர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (8) காலை வேளையில் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் வழமை போல் சிறைச்சாலைக்கு வருகை தந்ததுடன், கைதிகளைச் சந்திப்பதற்கு தேவையான வசதிகளையும் அனுமதியையும் சிறைச்சாலை நிர்வாகம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலையின் அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக 78 கைதிகள் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்களில் 28 கைதிகள் மேலதிக மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest News
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Local
08 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!
Local
08 August 2026
பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்
Local
08 August 2026
சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள ஆபத்தானவர்கள் குறித்து ஸ்ரீநேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
08 August 2026
14 மாதங்கள் வீட்டில் இருந்தேன்: வருங்கால மனைவிதான் காரணம் – கடினமான காலம் குறித்து மனம் திறந்த விஷால்
Local
08 August 2026
"நாய்க்கு நாய்னு பேரு வச்சது யாருடா?" இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் AI அனிமேஷன் காணொளிகள்
Local
08 August 2026
குவைத் - கொழும்பு ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Local
08 August 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
Local
08 August 2026
டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை முறியடிப்பாரா மிட்செல் ஸ்டார்க்!
Local
08 August 2026
பல்லன்சேன சிறைச்சாலை சொத்துகளுக்கு சேதமில்லை - சிறைச்சாலைகள் திணைக்களம்
Local
08 August 2026