இங்கிலாந்தில் 1993ஆம் ஆண்டைக் காட்டிலும் உடல் பருமன் விகிதம் இரட்டிப்பாகி, தற்போது 30% ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 14 மில்லியன் பெரியவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1993இல் 15% ஆக இருந்த உடல் பருமன் விகிதம், 2024இல் 30% என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டின் நிலையே தொடர்ந்திருந்தால், தற்போது 7 மில்லியன் மக்கள் உடல் பருமன் பாதிப்பில் இருந்து தப்பியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, 16 முதல் 24 வயதுடைய இளைஞர்களிடையே உடல் பருமன் விகிதம் 6%இல் இருந்து 18% ஆக அதிவேகமாக அதிகரித்துள்ளது.
உடலுழைப்பு குறைந்த அலுவலகப் பணிகள் அதிகரிப்பு, துரித உணவகங்கள் அதிகரிப்பு, அதிக கொழுப்பு/சர்க்கரை நிறைந்த உணவுகளின் விலை குறைவு ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
உடல் பருமனால் ஏற்படும் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பாதிப்புகளால் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 126 பில்லியன் பவுண்டுகளும், NHS சுகாதார சேவைக்கு 12 பில்லியன் பவுண்டுகளும் செலவாகின்றன.
கடந்த 30 ஆண்டுகளில் 14 வெவ்வேறான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.
சமீபத்தில் இரவு 9 மணிக்கு முன்னர் தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் நொறுக்குத் தீனி விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
GLP-1 போன்ற உடல் எடையைக் குறைக்கும் ஊசிகள் மற்றும் மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், வெறும் மருந்துகளை மட்டும் நம்பியிருப்பது சமூகத்தின் தோல்வி என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
Latest News
இஸ்ரேலில் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறை வேலைவாய்ப்பு: நாளை முதல் பதிவுகள் ஆரம்பம்!
Local
09 August 2026
மீண்டும் திரையில் விஜய் - த்ரிஷா : ‘வெளியான அதிரடி அறிவிப்பு!
Local
09 August 2026
கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!
Local
09 August 2026
காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!
Local
09 August 2026
அரசாங்கத்தின் முதன்மை இலக்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதா? - சஜித் கேள்வி
Local
09 August 2026
"எங்க அப்பா ரொம்ப சப்போர்ட்" – தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி
Local
09 August 2026
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை
Local
09 August 2026
உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!
Local
09 August 2026
நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு
Local
09 August 2026
நாளை ஆரம்பமாகும் உயர் தரப் பரீட்சை: பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
09 August 2026