International09 August 2026

பெண் ஊழியருக்கு பெருந்தொகை பணம் வழங்கினாரா கியானி இன்பான்டினோ?

பிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ ஐரோப்பிய கால்பந்து அமைப்பின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், பெண் ஊழியர் ஒருவருக்கு பெருந்தொகை பணத்தை பிரிவுக் கொடையாக வழங்கியதாக வெளியான குற்றச்சாட்டுகளை வலுவாக மறுத்துள்ளார்.
 
தம் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்றும், தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அவதூறு என்றும் அவரின் தரப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எந்தவொரு ஊழியரும் எந்த காலகட்டத்திலும் முறைப்பாடு அளிக்கவில்லை என்றும் அவரின் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பிட்ட அந்தப் பெண் ஊழியருக்கு வெளியேறும் போது ஊதியமும், உள்ளூர் வணிகப் பள்ளியில் பட்டப்படிப்புக்கான கட்டணமும் வழங்கப்பட்டதை ஐரோப்பிய கால்பந்து அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், தனியார் முதலீட்டாளர்களுக்கு ஃபிஃபா போட்டிகளை விற்கும் திட்டம் மற்றும் முறையற்ற நிதி விவகாரங்களால் இன்பான்டினோ கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்.

இன்பான்டினோ மீது தனக்கு "நம்பிக்கையில்லை" என்று ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதோடு, உலகக் கிண்ணப் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது.

இதேவேளை கியானி இன்பான்டினோ, அடுத்த மார்ச் மாதம் ரபாத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் நான்காவது மற்றும் இறுதித் தெரிவுக்காக போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes