General09 August 2026

நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்து மூன்று முக்கிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுமாவே ஸ்ரீ சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர சட்டத்தரணிகள் இயக்கம் மற்றும் 'தினன தகுண' சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கண்டி நகரில் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது இலங்கையின் சட்டங்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டிச் செயற்படும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் பணிகளை மகாநாயக்க தேரர் பாராட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes