கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) எதிர்காலத்தில் குடியேறுவதற்கு திட்டமிடும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதால், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் என உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் எச்சரித்துள்ளார்.
துறைசார் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், துறைமுக நகரத்தில் குடியேறக்கூடியவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போதிலும், அவர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.
"ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால், அவர்களால் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும்.
ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு இடம் எதுவும் இல்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்" என்று தெரிவித்த அவர், துறைமுக நகரத்துக்காக பிரத்தியேகமாக தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம், துறைமுக நகர நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த எஸ்.எம். மரிக்கார், வர்த்தமானி அறிவித்தலானது நாடு தழுவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தேர்தல்களுக்கான சேர்க்கையை உறுதிப்படுத்திய போதிலும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அது தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால், அது துறைமுக நகரத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போது அங்கு நிரந்தர வாக்காளர்களாக மக்கள் யாரும் வசிக்கத் தொடங்காத நிலையிலும், எதிர்காலத்தில் இங்கு குடியமரப்போகும் மக்களுக்கான வாக்களிக்கும் உரிமை மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவம் குறித்தே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார்.

Latest News
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026
வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
10 August 2026
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Local
10 August 2026
கிழக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு
Local
10 August 2026
கேகாலையில் தாமதமாக வழங்கப்பட்ட வினாத்தாள்: இருவேறு கோணங்களில் விசாரணை!
Local
10 August 2026
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிறாரா நடிகர் தனுஷ்?
Local
10 August 2026
தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!
Local
10 August 2026
கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
10 August 2026
கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் கடுவல நீதிமன்றத்தில் முன்னிலை
Local
10 August 2026
மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!
Local
10 August 2026