நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்குத் தாமதங்களைத் தவிர்க்கத் தடயவியல் அறிக்கைகள் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஜூலையில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறைக் கைதிகளின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவை வகைப்படுத்தி தரவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் 5 சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையால் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறைகளில் பாதுகாப்பு கெமராக்களை நிறுவ நிதி ஒதுக்குமாறும், புனர்வாழ்வு சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க "மிதுரு பாசல" திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கான போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest News
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!
Local
15 August 2026
மலையக ஆலயங்களைப் பதிவு செய்ய உடனடி நடவடிக்கை! – சுந்தரலிங்கம் பிரதீப் விசேட கோரிக்கை.
Local
15 August 2026
கல்கிசையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
Local
15 August 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் இந்து கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை!" – சுந்தரலிங்கம் பிரதீப் தகவல்.
Local
15 August 2026
சந்திப்புக் காணொளிகளை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதில்!
Local
15 August 2026
மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.
Local
15 August 2026
இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்
Local
15 August 2026
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!
Local
15 August 2026
வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !
Local
15 August 2026
"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!
Local
15 August 2026