மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இரத்மலானை சைமா உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் நேற்று மாலை வானூர்தி ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 41 வயதுடைய பிரதான சந்தேகநபர், மலேசியக் காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
2014ஆம் ஆண்டு பேராதனை பகுதியில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி ஒருவரை கடத்தி தாக்கியமை மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பகுதியில் மற்றுமொருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பான இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், சந்தேகநபருக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2003ஆம் ஆண்டு கல்கிஸ்சை பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டொன்றை வைத்திருந்தமை தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, பிரதான சந்தேகநபரான இரத்மலானை சைமாவுடன் மலேசியாவிலிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 35 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 31 வயதுடைய கல்கிஸ்சையை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
"ஒருநாள் ரெமோ.. மறுநாள் அந்நியன்" - காதல் வலியை வெளிப்படையாக உடைத்த அனுபமா!
Local
13 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை
Local
13 August 2026
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் - சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை குழாம் அறிவிப்பு!
Local
13 August 2026
கித்துல்கலையில் கைக்குண்டு மீட்பு
Local
13 August 2026
முகநூல் மூலம் கோடிக்கணக்கில் வீட்டு மோசடி: இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்த நபர் மிரிஹானையில் கைது!
Local
13 August 2026
செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
Local
13 August 2026
முன்னாள் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
படுக்கையிலேயே முடங்கிய நடிகை ஷகீலா : வெளியிட்ட உருக்கமான காணொளி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Local
13 August 2026
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி - இருவர் கைது!
Local
13 August 2026
'பெக்கோ சமனின்' தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர்களின் உந்துருளி மீட்பு!
Local
13 August 2026