கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் ஒன்பது மாதங்களாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினர் சமர்ப்பித்த விடயங்களைப் பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறித்த சந்தேகநபரிடம், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றையும் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட விதம், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சந்தேகநபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான மேலதிக அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட காலப்பகுதி, பணம் பரிமாறப்பட்ட விதம் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் விதம் தொடர்பான தகவல்களையும் காவல்துறையினர் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் விசாரணைகள் தொடர வேண்டியுள்ளதாகத் தெரிவித்த கொழும்பு குற்றப் பிரிவு, சந்தேகநபரின் முகத்தை CCTV காட்சிகளுடன் ஒப்பிடும் நோக்கில் சிறப்பு முகப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, அவரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேகநபரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
Latest News
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை
Local
13 August 2026
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் - சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை குழாம் அறிவிப்பு!
Local
13 August 2026
கித்துல்கலையில் கைக்குண்டு மீட்பு
Local
13 August 2026
முகநூல் மூலம் கோடிக்கணக்கில் வீட்டு மோசடி: இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்த நபர் மிரிஹானையில் கைது!
Local
13 August 2026
செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
Local
13 August 2026
முன்னாள் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
படுக்கையிலேயே முடங்கிய நடிகை ஷகீலா : வெளியிட்ட உருக்கமான காணொளி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Local
13 August 2026
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி - இருவர் கைது!
Local
13 August 2026
'பெக்கோ சமனின்' தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர்களின் உந்துருளி மீட்பு!
Local
13 August 2026
நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : முதலிடத்தில் எந்த மாவட்டம் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
Local
13 August 2026