யானைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுற்றாடல் அமைச்சு, சூழல் தொகுதியின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் தீர்மானமிக்கதாக விளங்கும் யானைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து இந்த சந்தர்ப்பத்தில் உலகத்தின் அவதானம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பல வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக யானைகளின் நடமாட்டப் பாதைகள் மற்றும் யானை வழித்தடங்கள் தடைப்பட்டதால், பாதகமான சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக யானைகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது யானைகளின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சுற்றாடலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 199 யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான மரணங்கள் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டுள்ளதுடன்,பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பிகளில் சிக்குதல் மற்றும் பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுதல் ஆகியவற்றினாலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த ஒன்றியத்தின் செயலாளரான சுற்றாடலியலாளர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
Latest News
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: 'ChatGPT' செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
Local
16 August 2026
80ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தடுமாற்றம் - அயர்லாந்து கொடியை அணிந்தார் எனவும் விமர்சனம்!
Local
16 August 2026
சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள் 73 பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்: காவல்துறை மாஅதிபர்
Local
16 August 2026
"பாலம் கட்டும்போது படகோட்டிக்கு சிக்கல் ஏற்படுவது இயல்பே" – விமர்சனங்களுக்கு உவமையில் நளிந்த பதில்!
Local
16 August 2026
பொலித்தீன் பயன்பாட்டை 10 மில்லியன் அலகுகளால் குறைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறுகிறது!
Local
16 August 2026