அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக தெரிவித்து காவல்துறையில் இரண்டு வெவ்வேறான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குறித்த சிறுமி, கடந்த 9ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக காலி பகுதிக்குச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் மிரிஸ்ஸவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது, தான் சந்தித்த துயரங்கள் குறித்து பாட்டியிடமும் உறவினர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியை அம்பாலாந்தோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பாட்டி முறைப்பாடு அளித்துள்ளார்.
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
சந்தேகநபரான தாத்தா மற்றும் தந்தை, சிறுமியிடம் பல சந்தர்ப்பங்களில் முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என இரு சந்தேகநபர்களும் அச்சுறுத்தியதாக சிறுமி காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இரு சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய அம்பாலாந்தோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Latest News
பிற்பகல் 2 மணிக்கு பின் வெளியே செல்வோரின் கவனத்திற்கு!
Local
16 August 2026
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: 'ChatGPT' செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
Local
16 August 2026
80ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தடுமாற்றம் - அயர்லாந்து கொடியை அணிந்தார் எனவும் விமர்சனம்!
Local
16 August 2026
சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள் 73 பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்: காவல்துறை மாஅதிபர்
Local
16 August 2026