அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாகவும், நாட்டின் அபிவிருத்திப் பணிகள் மிக வேகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்டம் அனைவருக்கும் சமமாகத் தனது கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகவே, கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களும், குற்றமிழைத்தவர்களும், நாட்டைப் பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்களும் தற்போதைய அரசுக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் மீது கடந்த காலத்தில் செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
விசாரணை நிறைவடையும் பட்சத்தில், இன்னும் சில மாதங்களில் அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம்.
சிறைத் தண்டனைக்கு பயந்தே எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும், ஊடக சந்திப்புகளையும் நடத்தி குழப்பங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் மிகவும் திட்டமாகவும் பலமாகவும் முன்னோக்கிச் செல்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியை யாராலும் வீழ்த்த முடியாது.
மக்களை மையமாகக் கொண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சக்தியாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து இயங்கும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
Latest News
கின்னஸ் சான்றளித்த உலகின் மிக உயரமான 10 பெண்களின் பட்டியல் வெளியீடு!
Local
17 August 2026
முப்படை ஆராய்ச்சி அமைப்புகளையும் இணைத்து ஒரே தேசிய மையம்: ஜனாதிபதி யோசனை!
Local
17 August 2026
விரைவில் இலங்கை மக்கள் விருப்பமான வாகனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்: விஜித ஹேரத் உறுதி!
Local
17 August 2026
ஆண்டின் இறுதிக்குள் 'எல் நினோ' தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
17 August 2026
1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்
Local
17 August 2026
கடந்த 16 நாட்களில் 6,900க்கும் அதிகமானோருக்கு டெங்கு: கம்பஹாவில் உச்சகட்ட அச்சுறுத்தல்!
Local
17 August 2026
உட்பூசல்களாலேயே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததாக குற்றச்சாட்டு!
Local
17 August 2026
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!
Local
17 August 2026
கஞ்சாவை பறிமுதல் செய்து உலர்த்தக் கொடுத்த காவல்துறை: நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிரடி கைது நடவடிக்கை!
Local
17 August 2026
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026