சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக "பியூ ஆராய்ச்சி மையம்" (Pew Research Centre) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.
இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய 7.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளே இந்த இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் நிலைஇந்தியாவின் அண்டை நாடுகளில் கலவையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. பங்களாதேஷில் 42 சதவீதமானோர் சாதகமாகவும், 51 சதவீதமானோர் பாதகமாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியமை போன்ற தீவிரமடைந்த அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் 58 சதவீதமானோர் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், ஜப்பான் (55%), தாய்லாந்து (55%), சிங்கப்பூர் (51%), இந்தோனேசியா (50%) மற்றும் பிலிப்பைன்ஸ் (49%) ஆகிய ஆசிய நாடுகளில் இந்தியா குறித்து சாதகமான நிலையே நீடிக்கிறது.
அமெரிக்காவில் 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையும், 50 சதவீதமானோர் எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த சாதகமான நிலை 2026 ஆம் ஆண்டு 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அங்குள்ள அரசியல் கட்சிகளில், ஜனநாயகக் கட்சியினரில் 50 சதவீதமானோரும், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரில் 42 சதவீதமானோரும் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் இந்தியாவுக்கான ஆதரவு முறையே 15% மற்றும் 18% ஆகக் குறைந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் 55 சதவீதமானோர் எதிர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இந்தியா தொடர்ந்தும் பலமான ஆதரவைப் பெற்று வருவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest News
இருவேறு வழக்குகளில் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குப் பிணை!
Local
18 August 2026
அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்?
Local
18 August 2026
22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் மனுத் தாக்கல்!
Local
18 August 2026
தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!
Local
18 August 2026
சந்திமாலுக்குப் பதிலாக பசிந்து சூரியபண்டார சேர்ப்பு!
Local
18 August 2026
முதலாவது டெஸ்ட்டில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் இலக்கு!
Local
18 August 2026
'பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல்' சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல்!
Local
18 August 2026
இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு
Local
18 August 2026
"விஜய்க்காக 16 பாடல்கள் கொண்ட சிறப்பு ஆல்பம்" சாய் அபயங்கர் நெகிழ்ச்சி
Local
18 August 2026