கடந்த சனிக்கிழமை சூரியனின் "விழுதுகள்” நிகழ்ச்சியில் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துக் கொண்டு இலங்கையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் ஆலய நிர்வாகங்களுக்கு இடையே காணப்படும் பிளவுகளைத் தவிர்த்து, இந்துக்களை ஒன்றிணைக்கும் வலுவான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஏனைய மதங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது முடிவுகளை எடுப்பதற்கு மதப் பீடங்களும் ஒருங்கிணைந்த தலைமைத்துவமும் காணப்படுவதைப் போன்று, இந்து சமயத்திலும் அனைத்து பேதங்களையும் கடந்து ஒன்றிணையக்கூடிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் விழுதுகள் நிகழ்ச்சியை மேற்கோள் காட்டிஇலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமயத்தில் செயற்பட்டு வருகின்ற அனைவரும் ஒருங்கிணைந்து, பரஸ்பர ஒத்துழைப்புடன் ஒரு முறையான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு திறந்த அழைப்பை விடுத்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்து, எமது நீண்டகால நிலைப்பாட்டுடனும் முயற்சிகளுடனும் ஒத்துப்போகின்ற ஒரு முக்கியமான அழைப்பாக நாம் கருதுகின்றோம்.
இந்து சமயத்தில் உள்ள குருமார்கள், சமய அறிஞர்கள், குருமார் அமைப்புகள் மற்றும் இந்து சமயத்திற்காக உண்மையாகப் பணியாற்றுகின்ற அனைத்து தரப்பினரும் வேறுபாடுகளைத் தாண்டி, ஒருங்கிணைந்து, ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒரு வலுவான தேசிய கட்டமைப்பு அவசியம் என்ற கருத்தை இதன் மூலம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ள இந்தத் திறந்த அழைப்பை ஒரு அரசியல் அழைப்பாக அல்லாமல், இந்து சமயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்குமான ஒரு ஆக்கபூர்வமான வாய்ப்பாகவே தாம் பார்ப்பதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Latest News
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
Local
17 August 2026
சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா?
Local
17 August 2026
'டிட்வா' சூறாவளி நிவாரண நிதியில் 70% செலவிடப்படாமல் உள்ளது!
Local
17 August 2026
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
17 August 2026
அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
17 August 2026
பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
Local
17 August 2026
மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி
Local
17 August 2026
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: இரண்டு சிறுவர்களை மீட்டது கடற்படை!
Local
17 August 2026