இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இரு நாடுகளிலும் தண்டனை பெற்ற குடிமக்கள், தமது எஞ்சிய தண்டனைக் காலத்தைச் சொந்த நாட்டில் அனுபவிக்கவும், அவர்களின் சமூக மறுவாழ்வு மற்றும் மீள் இணைப்புக்கு ஆதரவளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்ஹர்ஷன நாணயக்காரவினால் இதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நியைில் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகள் இடமாற்றச் சட்டத்தின் கீழ், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர் தமது சொந்த நாடுகளுக்குச் சென்று தண்டனையை அனுபவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாடுகளில் தண்டனை பெற்ற இலங்கைக் குடிமக்களும் எஞ்சிய தண்டனைக் காலத்தை இலங்கையில் அனுபவிப்பதற்கு இந்தச் சட்டம் இடமளிக்கிறது.
போலந்துடன் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான கைதிகள் இடமாற்றங்களை முறைசார்ந்த சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
Local
19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!
Local
19 August 2026
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா!
Local
19 August 2026
அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம்!
Local
19 August 2026
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!
Local
19 August 2026
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களைப் பரப்பியவருக்கு விளக்கமறியல்
Local
19 August 2026
சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய ஒருங்கிணைந்த பொறிமுறை – நீதியமைச்சர்
Local
19 August 2026
தெஹிவலை மிருகக்காட்சிசாலையின் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
Local
19 August 2026
போக்குவரத்து அபராதங்களை செப்டம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும்!
Local
19 August 2026
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026