General19 August 2026

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று, நேற்று (18) உயிரிழந்துள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்பதற்கு முன்னர் குறித்த ஒட்டகச்சிவிங்கிக்கு எந்தவித நோய்களும் பதிவாகியிருக்கவில்லை.

இதனால் வயது முதிர்வு காரணமாகவே இது இயற்கையாக உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக இன்று (19) பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

காடுகளில் வாழும் ஒட்டகச்சிவிங்கிகள் வழக்கமாக 20 முதல் 25 ஆண்டுகள் வரை மட்டுமே வாழக்கூடியவை. எனினும், மிருகக்காட்சிசாலைகளில் முறையான பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதால் அவை நீண்ட காலம் வாழ வாய்ப்புள்ளது.

தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு புதிய ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை இலங்கைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes