குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றம் சாட்டப்பட்ட ஷஷி வீரவன்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும்,ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக பிரதம நீதவான் தெரிவித்தார்.
எனினும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஷஷி வீரவன்ச சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தனது சேவை பெறுநர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மேன்முறையீடு தொடர்பில் அடுத்த மாதம் காரணங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதால், அதுவரை அவரை முன்பிணையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 42 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை இருப்பதாகவும், அதன்படி அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதைக் கருத்திற்கொண்டு, அதற்கான அறிவிப்புக்கு உட்பட்டு ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வழக்கை மீண்டும் செப்டம்பர் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest News
திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!
Local
20 August 2026
“சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போல துடிக்கிறார்கள்” – சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவேசம்!
Local
20 August 2026
தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவா? – ஜி.வி.பிரகாஷின் அதிரடி பதில்!
Local
20 August 2026
ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை – வழக்கு செப்டம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
20 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு – நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டு
Local
20 August 2026
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை!
Local
20 August 2026
சாணக்கியனின் கேள்விக்கு ஒரு வாரத்தில் தீர்வு - சுகாதார அமைச்சர் உறுதி!
Local
20 August 2026
அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் – சாணக்கியன் இராசமாணிக்கம்
Local
20 August 2026
சிறுவர் பாதுகாப்பு ,கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகள்!
Local
20 August 2026
ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்... எதிர்க்கட்சிக்கு இன்னொரு நியாயமா? சஜித் அதிருப்தி
Local
20 August 2026