தமிழக சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய சிற்றுந்துகள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகக் கூறப்படும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தவிக்கும் சூழலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு செலவில் சொகுசு வாகனங்கள் வாங்கித் தருவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று கூறிவிட்டு, மக்கள் வரிப்பணத்தை சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக விரயம் செய்வது முறையல்ல என்றும், சிற்றுந்து தேவையுள்ளவர்கள் தங்கள் சொந்த வேதனத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளலாமே என்ற விவாதங்களும் வலுப்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், கடுமையான விமர்சனங்களும் அதிருப்தி அலைகளும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான உயர் மட்டக் குழுவினரிடம் ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பு வெளியானது குறித்து அவர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Latest News
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!
Local
07 September 2026
கற்பிட்டியில் 200 புறாக்களுடன் நால்வர் கைது: 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பந்தயப் புறாக்கள் மீட்பு!
Local
07 September 2026
அம்பாறை, மட்டக்களப்பில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடும் வீழ்ச்சி: சீயம்பலாண்டுவையில் குழாய் கிணறுகள் திருத்தம்
Local
07 September 2026
குடும்ப மருத்துவர் முறைமை மற்றும் 'ஆரோக்கிய' மையங்கள் மூலம் சுகாதாரத் துறையில் புதிய சீர்திருத்தம்: ஜனாதிபதி
Local
07 September 2026
புடாபெஸ்டில் வரலாற்றுச் சமர்: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை வீரன்!
Local
07 September 2026
டெங்கு எச்சரிக்கை: உயிரிழப்புகள் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
Local
07 September 2026
தொடர் பயணங்களால் ஆபத்து: வாசனா யானை தொடர்பில் கதிர்காம தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
07 September 2026
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: ஸ்ரீலங்கன் வானூர்திகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன!
Local
06 September 2026
"அரசாங்கத்தால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது; மக்களும் இணைய வேண்டும்" - டில்வின் சில்வா வலியுறுத்தல்
Local
06 September 2026
புதிய பச்சை நிற இலக்கத் தகடு: அறியாத காவல்துறையினரால் வாகன உரிமையாளர் அசௌகரியம்
Local
06 September 2026