General22 August 2026

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்துக்களால் 1,654 உயிரிழப்பு

இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை 1,654 உயிரிழப்பு வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துகளில் மொத்தம் 1,749 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடுமையான சாலை விபத்துகளில் காயமடைந்த 4,556 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான விபத்துகளில் காயமடைந்த 7,295 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதே காலகட்டத்தில் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்ட 3,232 விபத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில்:
576 பேர் — பாதசாரிகள்
617 பேர் — உந்துருளி ஓட்டுநர்கள்
122 பேர் — உந்துருளிகளின் பின்னிருக்கை பயணிகள்
119 பேர் — ஈருருளி ஓட்டுநர்கள்
139 பேர் — வாகன ஓட்டுநர்கள்
173 பேர் — பயணிகள் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes