இலங்கையின் நீண்டகால அந்நியச் செலாவணி, வழங்கி மற்றும் கடன் தரவரிசை மதிப்பீட்டில் 'Caa1' ஆக சர்வதேச தரநிர்ணய நிறுவனமான மூடீஸ் உறுதிசெய்துள்ளது.
Caa1 தரமதிப்பீடு என்பது, கடன் மோசமான நிலையில் இருப்பதையும், மிக அதிக கடன் அபாயத்தைக் கொண்டிருப்பதையும் குறிக்கும் குறிக்காட்டியாகும்.
2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார சீராக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், கடன் தாங்குதிறன் மற்றும் கடன் சுமை இன்னும் பலவீனமாகவே உள்ளது.
சர்வதேச நாணய நிதிய திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் காரணமாக அரச வருமானம் அதிகரித்து, முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் உபரி நிலைப்பேணப்படுகிறது.
இருப்பினும், அரசின் வருமானத்தில் 40 வீதத்துக்கும் அதிகமான தொகை வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் அரச கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 95 வீதமாக இருக்கும் என்றும் மூடீஸ் கணித்துள்ளது.
இலங்கையின் இறக்குமதிச் செலவுகளுக்கான அந்நியச் செலாவணி கையிருப்பு 3 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது.
எனவே, மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்படக்கூடிய எரிபொருள் விலை உயர்வு, சுற்றுலாத்துறை வருமானப் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்குச் சவாலாக அமையலாம்.
குறுகிய காலத்தில் பொருளாதாரம் மீட்சியடைந்தாலும், திறமையான பணியாளர்களின் வெளிநாட்டு வெளியேற்றம் மற்றும் தனியார் துறை முதலீடுகளின் வீழ்ச்சி காரணமாக நடுத்தர காலப் பொருளாதார வளர்ச்சி சுமார் 4 வீதமாக மட்டுமே இருக்கும் என்று மூடீஸ் கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியக்கடன் திட்டம், 2027 ஆம் ஆண்டுடன் நிறைவடையும்.
அதன் பின்னர், 2028 முதல் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு படிப்படியாக அதிகரிக்கும்.
எனவே, சர்வதேச நாணய நிதியத் திட்டம் முடிந்த பிறகும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதே இலங்கையின் கடன் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும் என்று மூடிஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!
Local
26 August 2026
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்
Local
26 August 2026
செப்டம்பர் 14 முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்
Local
26 August 2026
கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!
Local
26 August 2026
3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின் திடீர் திருமணம் : தடகள உலகை அதிரவிட்ட உசைன் போல்ட்டின் காதலுக்கு கிடைக்கும் மகுடம்!
Local
26 August 2026
அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது - ஆனந்த விஜேபால
Local
26 August 2026
சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு
Local
26 August 2026
எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு
Local
26 August 2026
நகைப் பிரியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு : இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
Local
26 August 2026
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 726 சந்தேக நபர்கள் கைது!
Local
26 August 2026