International26 August 2026

அமெரிக்க உளவுத் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் மொஸ்கோவுக்கு திடீர் பயணம்

அமெரிக்க மத்திய உளவு அமைப்பான CIA வின் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் (John Ratcliffe) அறிவிக்கப்படாத திடீர் பயணமாக ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவுக்கு சென்றுள்ளார்.

இதனை அமெரிக்காவின் சிபிஎஸ் (CBS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று மொஸ்கோ சென்றடைந்த ஜோன் ராட்கிளிஃப்இ அங்கு யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அல்லது எதற்காக இந்தப் பயணம் என்பது குறித்து வொஷிங்டனோ அல்லது மொஸ்கோவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உயர் மட்டத்திலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் அரிதாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில்இ அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான பெரிய போக்குவரத்து வானுார்தி ஒன்று (C-17) லாத்வியா (Latvia) வழியாக செவ்வாய்க்கிழமை ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுள்ளதை வானுார்தி கண்காணிப்புத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் இந்த பயணம் அமைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கு முன்னரும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களில் CIA முக்கிய பங்கு வகித்திருந்தமையை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.

யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்இ ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கு பயணம் செய்துள்ள மிக உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளில் ஜோன் ராட்கிளிஃபும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
Related recommendation
Hiru TV News | Programmes