ஈரான் மீதான புதிய அமெரிக்கத் தடைகள் "அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதச் செயல்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர், பாதுகாப்புச் சபை மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கும் அவர் உத்தியோகபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
போர் மூலமாகவும், ஏனைய முயற்சிகளிலும் தோல்வியடைந்த பின்னரே, ஈரானின் சட்டபூர்வமான பொருளாதாரத் தொடர்புகளைத் துண்டிக்க அமெரிக்கா முற்பட்டுள்ளதாக அக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடைகள் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இது மனித உரிமைகளான உயிர்வாழும் உரிமை, சுகாதாரம் மற்றும் உணவுக்கான உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் ஒருபக்கக் கட்டாய நடவடிக்கைகள் மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளைக் கடுமையாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் இந்தத் தடைகளை உறுப்பு நாடுகள் எவையும் அங்கீகரிக்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது- நள்ளிரவு முதல் அமுல்!
சைப்ரஸ் அருகே கவிழ்ந்த பயணிகள் கப்பல்: 7 பேர் பலி - 23 பேர் மாயம்!
குருந்தூர் விகாரைக்கான காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!
900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய நேபாளப் பாடசாலை அதிபரின் துரித நடவடிக்கை!
பேரழிவை ஏற்படுத்திய தீடீர் அனர்த்தம்: நேபாளம் - திபெத்தில் 804 உடல்கள் மீட்பு
நான் பெயரை மாற்றவில்லை - அர்ஜுன மகேந்திரன் கடிதம்
நுவரெலியா மாவட்டத்துக்கு ரூ. 997 மில்லியன் பெறுமதியான 786 புதிய அபிவிருத்தித் திட்டங்கள்!
திபெத்தில் அடுத்தடுத்து மண்சரிவு: புதிதாக உருவான தடுப்பு ஏரியால் பரபரப்பு!
தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் வேதனத்தில் வேலை கொடுத்த சிறுவன்!
ஒருநாள் உலகக்கிண்ண தொடர் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக திலக் வர்மாவை பரிசீலிக்கும் BCCI!