மட்டக்களப்பு - கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றியவாறு (charge) மார்பில் வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞர் ஒருவர், தொலைபேசி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் சம்பவத்தன்று மாலை வீட்டில் உறங்குவதற்காகச் சென்றபோது, தனது கையடக்கத் தொலைபேசியை மின் இணைப்பில் மின்னேற்றியவாறு அதனை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கியுள்ளார்.
இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி அதிக வெப்பமாகி வெடித்ததில் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
இரவோடு இரவாக வெடித்து சிதறிய ஆயுதக்கிடங்கு : 37 பேர் உடலங்கள் மீட்பு 50 வீடுகள் தரைமட்டம்!
Local
30 August 2026
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க எனப்படும் சாரங்க பிரதீப் துபாயில் கைது
Local
29 August 2026
“பங்கேற்க மாட்டோம்” - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி முடிவு!
Local
29 August 2026
62 ஆவது பிறந்தநாளில் 62 புடவைகளைப் பரிசளித்து நடிகை நளினியை நெகிழ வைத்த சகோதரன்!
Local
29 August 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!
Local
29 August 2026
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!
Local
29 August 2026
கீழ் மல்வத்து ஓயா திட்டப் பணிகளை விரைவுபடுத்த பணிப்புரை!
Local
29 August 2026
இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் சதி: GMOA எச்சரிக்கை!
Local
29 August 2026
கடத்தப்பட்ட பெண்ணுடன் தப்ப முயன்ற சிற்றூந்து மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு!
Local
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !
Local
29 August 2026