எதிர்கால சந்ததியினருக்காகப் பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்கு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரியுள்ளது.
ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு மாற்றாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விசேட சுற்றுநிருபம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன், திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டதிட்டங்களுக்கும் அப்பால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் எடுத்துச் செல்வது போன்ற சிறிய அன்றாடப் பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest News
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
31 August 2026
விஜய் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விடுவோம்: காங்கிரஸின் அறிவிப்பு
Local
31 August 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
Local
31 August 2026
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Local
31 August 2026
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
Local
31 August 2026
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026