கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 இன்று நீதிமன்றம் செயல்படாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் (CLS) அறிவித்துள்ளது.
கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம விடுத்துள்ள அவசர அறிவிப்பின்படி, நிலவும் சூழ்நிலை காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
இன்று விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் செப்டம்பர் 30, 2026 அன்று விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த மேலதிக அறிவுறுத்தல்களை நீதிபதிகள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இடைக்காலத் தடை உத்தரவுகளை நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் அமைப்பு நிலையற்றதாக இருக்கலாம் என எச்சரித்துள்ள கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அந்த கட்டிடத்திற்குள் நுழைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
சூழ்நிலைக்கு ஏற்ப மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Latest News
யுக்ரைன் போர் அமைதி ஒப்பந்த முயற்சி: மாஸ்கோவில் புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!
Local
06 September 2026
கே-பொப் வரலாற்றில் புதிய மைல்கல்: யூடியூபில் சாதனை படைத்த பேபிமான்ஸ்டர்!
Local
06 September 2026
உலக அழகி 2026 கிரீடத்தைக் தட்டிச் சென்ற டொமினிகன் குடியரசு அழகி!
Local
06 September 2026
திகைக்க வைக்கும் புள்ளிவிபரம்: உலகை ஆளப்போகும் தாத்தா - பாட்டிகள்! குழந்தைகளை ஓரங்கட்டும் முதியவர்கள் சாம்ராஜ்யம்!
Local
06 September 2026
மாத்தறையில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது!
Local
05 September 2026
செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
Local
05 September 2026
தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் சிக்கியிருந்த மேலும் மூவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
Local
05 September 2026
“நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் - செப்.12 கூட்டத்தை தடுக்க முடியாது”
Local
05 September 2026
அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு!
Local
05 September 2026
நேபாள அனர்த்தம்: 10 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீனர் உயிருடன் மீட்பு
Local
05 September 2026