தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளர் வி.எஸ்.பாபு பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (03) காலை 10:30 க்கு வழங்கவுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்ற மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த தொகுதியிலுள்ள 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (விவிபேட்) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதன்போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் தரப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையின் போது சில இயந்திரங்கள் திடீரெனக் கோளாறடைந்து செயலிழந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த போது பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், த.வெ.க உறுப்பினரான வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லுபடியற்றதாக அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் இடம்பெற்ற விசாரணைகளின் போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் தரப்பு, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பு நியாயாதிக்கங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை காலை 10:30 க்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்
Local
08 September 2026
சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!
Local
08 September 2026
உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!
Local
08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!
Local
08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!
Local
08 September 2026
இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!
Local
08 September 2026
20 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.450 கோடி நிவாரணம்
Local
08 September 2026
விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது த்ரிஷா அனுப்பிய அந்த ஒரு குறுஞ்செய்தி : மாளவிகா மோகனன் பகிர்ந்த இரகசியம்!
Local
08 September 2026
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளது - ஐநா மனித உரிமைகள் அலுவலகம்
Local
08 September 2026