போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த இரு சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்ட இரு சந்தேகநபர்களும் 36 மற்றும் 37 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Latest News
உடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!
Local
05 September 2026
8 முதல் 11 வயதுக் குழந்தைகளுக்கு எடைக் குறைப்பு மருந்துகள் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
Local
05 September 2026
இலங்கைக்கு எதிரான போட்டிகள்: அறிவிக்கப்பட்டது இங்கிலாந்து அணி
Local
05 September 2026
நாமலின் கைதை கண்டித்துள்ள ரணிலின் கட்சி
Local
05 September 2026
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை
Local
05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
Local
05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்
Local
05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை
Local
05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா
Local
05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.
Local
05 September 2026