எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக வறண்ட வானிலயால் இலங்கையின் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (5) வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, வறண்ட வானிலையால் மொனராகலை மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளில் 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளில் 11,995 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
அனுராதபுரம் மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதையும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதையும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Latest News
வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் : பிரதமர் ஹரிணி அமரசூரிய முக்கிய அறிவிப்பு!
Local
08 September 2026
8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த உயிரிழந்த இராணுவ சிப்பாயின் மனைவி கிரிந்திவெலவில் கைது
Local
08 September 2026
இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் மறைமுக சூதாட்ட விளம்பரங்கள்: சிரேஷ்ட ஆய்வாளர் கேள்வி!
Local
08 September 2026
இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
08 September 2026
சமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்
Local
08 September 2026
பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம்: உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவித்தார் சபாநாயகர்
Local
08 September 2026
முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி
Local
08 September 2026
ரூ. 50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது
Local
08 September 2026
இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!
Local
08 September 2026
நான் போர்க் குற்றவாளியல்ல, ஆதாரத்துடன் நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயார் – சவேந்திர சில்வா
Local
08 September 2026