பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் 'கிரிக்கெட் சமர்' (Big Matches) தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest News
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!
Local
07 September 2026
ஆண்டிற்கு ஒருமுறை வரும் இயற்கை அழகு: தேயிலைத் தோட்டங்களை ஆக்கிரமித்த கஹகோனா மலர்கள்!
Local
07 September 2026
திமுகவை ஓட ஓட விரட்டுகிறார் முதலமைச்சர் விஜய் : தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!
Local
07 September 2026
சோம்பேறித்தனத்திற்கு கிடைத்த விசித்திர தண்டனை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞரின் ஏஐ லீலை!
Local
07 September 2026
கடவுள் தந்த பரிசு: ராமராஜன் - இளையராஜா இணையும் 25வது படத்தின் மாஸ் டைட்டில்!
Local
07 September 2026
விரைவில் வெளியாகிறது ரவி மோகன் - கெனிஷா கூட்டணியின் முதல் பாடல்: பின்னணி விவரங்கள் இதோ!
Local
07 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீளாய்வு: விண்ணப்பங்கள் கோரல்!
Local
07 September 2026
சிறையிலிருந்து நாடாளுமன்றம் வருவதற்கு அனுமதி கோரும் நாமல் - சபாநாயகருக்கு கடிதம்!
Local
07 September 2026
தெஹிவளையில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் மைத்துனர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு
Local
07 September 2026
அரச சுரங்கங்களை பிடியில் வைத்துள்ள விஜய்யின் நண்பர்கள் : பகிரங்க குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின்!
Local
07 September 2026