ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தால் ஜனநாயக நீரோட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகும் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இன்று (5) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் முரணான வாக்குமூலங்களை வழங்கியவரும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஒருவரிடமிருந்து அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குமூலமே இந்தத் கைது நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டமை ஊழலை ஒழிப்பதற்காகவே தவிர, அரச நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு தலைவரைச் சிறையில் அடைத்தாலும் அவரது கொள்கையையும் மக்கள் பலத்தையும் ஒடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன, செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்த்தில் நடத்தப்படவிருந்த மாபெரும் மக்கள் பேரணி திட்டமிட்டபடியே மிகவும் வலிமையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல்கொடுக்க செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்று திரளுமாறு அந்த அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
Local
12 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
Local
12 September 2026
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
Local
12 September 2026
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
Local
12 September 2026
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026
முத்துராஜவெல வனப்பகுதியில் தீப்பரவல் : கட்டுப்படுத்த தீவிர வான்வழி நடவடிக்கை!
Local
12 September 2026
இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Local
12 September 2026
இலங்கையை அச்சுறுத்தும் எல் நினோ: ஒக்டோபரில் கனமழை....பெப்ரவரியில் கடும் வறட்சி!
Local
12 September 2026