General07 September 2026

குடும்ப மருத்துவர் முறைமை மற்றும் 'ஆரோக்கிய' மையங்கள் மூலம் சுகாதாரத் துறையில் புதிய சீர்திருத்தம்: ஜனாதிபதி

இலங்கையின் இலவச சுகாதாரத் துறையில் நோயாளர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் தற்போதைய நடைமுறையை மாற்றி, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்படவுள்ள 1,000 'ஆரோக்கிய' (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மை பராமரிப்பு மருத்துவர் (Primary-care doctor) வசதி ஏற்படுத்தித் தரப்படவுள்ளது.

இதற்கமைய, நோயாளர்கள் பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமாயின், முதன்மையாகத் தங்களது குடும்ப மருத்துவரின் பரிந்துரையைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

தற்போதைய சுகாதார அமைப்பு முறைமை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில்:

"கொத்தமல்லி குடித்து ஓய்வெடுத்தாலே குணமாகக்கூடிய நோயாக இருந்தால், வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும். மருந்து எழுதிக் கொடுக்கப்பட்டால் அதைச் சரியாக உட்கொள்ள வேண்டும்.

ஆனால், இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகளைக் கூட மக்கள் முழுமையாக உட்கொள்வதில்லை. இது பெரும் வீணடிப்பாகும்; ஒரு குற்றமுமாகும்" எனச் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சுமார் 2.2 கோடி மக்கள் தொகை மட்டுமே உள்ள நிலையில், அரச மருத்துவமனைஆண்டுதோறும் சுமார் 8 கோடி (80 மில்லியன்) வெளிநோயாளர் வருகைகள் பதிவாவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, முறையான ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes