வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பணியாற்றிய சட்டத்தரணி அஜித் ரோஹண இன்றுடன் (08) காவல்துறை சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
38 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
அவரது ஓய்வினை முன்னிட்டு இன்று குருநாகல் வெலகெதர மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இலங்கை காவல்துறை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதி காவல்துறைமா அதிபராக (DIG) பதவியேற்றவர் என்ற வரலாற்றைப் படைத்ததுடன், சட்டமாணி (LL.B) பட்டம் பெற்ற சட்டத்தரணியாகவும், மக்கள் மரியாதையைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் விளங்குகிறார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் காவல்துறை ஊடகப் பேச்சாளராகச் சிறப்பான தகவல் தொடர்புப் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்புரீதியான குணங்களால் மக்களிடையே பெரிதும் பிரசித்தி பெற்றார்.
அவிசாவளையின் கொஸ்கம பகுதியில் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர், உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர் என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான சேவையைப் பாராட்டி இவருக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News
தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!
Local
08 September 2026
செப்.19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்!
Local
08 September 2026
ஆபத்தில் திபெத் பீடபூமி : வேகமாக மறையும் பனிப்பாறைகள் - பேராபத்து காத்திருக்கிறதா?
Local
08 September 2026
"சினிமா பாணியில் உரை - மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது" : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி!
Local
08 September 2026
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம்: சானக மதுகொட குற்றச்சாட்டு!
Local
08 September 2026
மஹிந்த தலைமையில் அனுராதபுர பேரணி: ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து!
Local
08 September 2026
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பு
Local
08 September 2026
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண ஓய்வு!
Local
08 September 2026
கையூட்டல் பெற்ற பாடசாலை அதிபர் கைது!
Local
08 September 2026
வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் : பிரதமர் ஹரிணி அமரசூரிய முக்கிய அறிவிப்பு!
Local
08 September 2026