இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துக்குச் சென்ற சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே இந்த முடிவுக்கான பிரதான காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலத்தில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த சில பிக்குகள் குஷ் எனப்படும் போதைப்பொருளை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை கருத்திற்கொண்டே இலங்கையர்களுக்கான இலவச விசா வசதியை இரத்து செய்ய தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்துக்குப் பயணம் செய்யும் இலங்கைப் பிரஜைகள், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த முடிவு தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு தாய்லாந்து தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தாய்லாந்துடன் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா இல்லா பயண வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Latest News
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026
விஜய் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புதிய விவாதம் – உண்மையைத் தேடும் ரசிகர்கள்!
Local
10 September 2026