"வாழ்க்கையில் எல்லாமே மாறலாம், ஆனால் அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது. வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அயல்நாடுகள் மாறவே முடியாது" என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை இந்தியாவின் மிக நெருங்கிய நண்பராக இந்தியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இலங்கைகை வந்தடைந்தார்.
இந்தநிலையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சமூகம் சார்ந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இந்தியா தனது முழு பலத்துடன் இலங்கைக்குத் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
இந்தியாவின் நீண்டகால பாரம்பரியம் தனது அயல்நாடுகளைக் குடும்ப உறுப்பினர்களாக நடத்துவதுதான் என்று கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று மற்றும் நாகரிக உறவுகளை கோடிட்டுக் காட்டினார்.
கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா உறுதுணையாக நின்றதை அவர் நினைவுகூர்ந்தhர்.
எதிர்காலத்திலும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இலங்கை அரசுடன் இந்தியா முழு பலத்துடன் நிற்கும் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ள ராஜ்நாத் சிங்இ தனது இந்தப் பயணத்தின் போது இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சுமார் நான்கு தசாப்தங்களில் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இந்திய அமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Latest News
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026
காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
09 September 2026
இலக்கத்தகடு நிலுவை பிரச்சினை ஆறு மாதங்களில் தீர்க்கப்படும்- மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026