உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று (9) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உதவிகள் உள்ளிட்ட சிரமமான காலப்பகுதிகளில் இந்தியா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், 'ஒபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) ஊடாக இந்தியா மேற்கொண்ட மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளையும் தாண்டி, கலாசார, வரலாற்று மற்றும் மத ரீதியான பிணைப்புகளால் உருவான நீண்டகால நட்புறவாகவே இலங்கை - இந்திய உறவு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும், நாடாளுமன்ற மற்றும் பொதுத்துறைசார் திறன் கட்டமைப்பு, நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் நல்லாட்சி தொடர்பாகவும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடரவும், மேலும் வலுப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதோடு, சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலதிகமாக, அறிவுப் பரிமாற்றம், புதுமை மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) போன்ற பிரத்தியேக இந்திய நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

Latest News
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026