பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்ணொருவரின் உடலம், உயிரிழந்து சில நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக மொரகஹேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போதே அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குடா உடுவ, கரகஹதெனிய பகுதியில் வசித்து வந்த 51 வயதான நிர்மலா பிரசாதி ஏகநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, மருதானை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பின்னர், அவர் பக்கவாதம் போன்ற நோய் நிலைக்கு ஆளாகியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது கணவருடன் வசிக்கவில்லை என்றும், மற்றொரு நபருடன் வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் மத வழிபாடுகளை மேற்கொண்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் உடலத்தை மீட்டபோது, அவர் உயிரிழந்து குறைந்தது இரண்டு நாட்களாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், பிரேதப் பரிசோதனைக்காக உடலம் ஹோமாகம மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹேன காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
இன்று 6 மாகாணங்களில் 100 மி.மீ.க்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 September 2026
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர ஆலோசனை!
Local
14 September 2026
அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி: இந்த ஆண்டில் 3-வது உயிரிழப்பு
Local
14 September 2026
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: பரிசளிப்பு நிகழ்வில் சர்ச்சை; கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி
Local
14 September 2026
சொந்த மண்ணில் ஏமாற்றம் அடைந்த பென் ஷெல்டன்: அமெரிக்க ஓபன் கோப்பையைக் தட்டிச் சென்ற ஸ்வரேவ்!
Local
14 September 2026
அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
Local
14 September 2026
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!
Local
14 September 2026
“திருடர்களைப் பிடிப்பதில் எல்லை எதுவும் இல்லை: எஞ்சிய பதவி காலத்தில் சகலருக்கும் தண்டனை!”
Local
14 September 2026
பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய 'வீர விநாயகர்': 51,000 உருத்திராக்கங்களால் பிரம்மாண்ட உருவாக்கம்!
Local
14 September 2026
சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!
Local
14 September 2026