நாட்டில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு தண்டனை வழங்கக் கூடாது எனக் கூறி, திருடர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்கும் சிறியதொரு பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட குழுவே சமூகத்தில் எஞ்சியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.
"இத்தகைய சிந்தனை கொண்ட சிறியதொரு குழுவையே அனுராதபுரத்தில் நேற்றைய தினம் நாம் கண்டோம்.
'திருடினாலும் பரவாயில்லை, சிறைக்கு அனுப்ப வேண்டாம்' என்றும், 'எங்கள் திருடன் எங்களுக்குப் போதும்' என்றும் கூறிக்கொண்டு கைதட்டி ஊழல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட குழுவினர் நாட்டிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
ஊழல்வாதிகளுக்கும் மோசடி செய்பவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டாம் எனக் கூறுபவர்கள் எங்குமே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.
அரசாங்கம் என்ற ரீதியில், சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதற்கான வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Latest News
ஐபிஎல் ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த திட்டம்
Local
16 September 2026
இலங்கைத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சர்வதேசக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் - சஜித்
Local
16 September 2026
அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!
Local
16 September 2026
எதிர்வரும் பத்து நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
Local
16 September 2026
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
16 September 2026
நாட்டை விட்டு வெளியேற முயற்சியா? - சிரந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் வெளியான உண்மைப் பின்னணி!
Local
16 September 2026
ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வானூர்தி நிறுவனத்திடம் விசாரணை
Local
16 September 2026
எயார்பஸ் நிதி முறைகேடு - நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை!
Local
16 September 2026
இலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம் : விசா விலக்கு தொடர்பிலும் கவனம்!
Local
16 September 2026
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை
Local
16 September 2026