தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாசத்திற்கும் இடையே எந்தவொரு ஒப்பீடும் செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை குறிப்பிட்டு நெல்சன் மண்டேலாவின் கூற்றை மேற்கோள் காட்டியிருந்தார்.
"சிலரை கஷ்டங்கள் உடைத்துவிடும், ஆனால் சிலரை அது வலிமையாக்கும்" என்ற மண்டேலாவின் வார்த்தைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள நஜித் இந்திக, தென்னாபிரிக்காவின் இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவருடன் நாமல் ராஜபக்ச தன்னை ஒப்பிட்டுக்கொள்வது பொருத்தமானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்சன் மண்டேலா அடக்குமுறைக்கும் இனவெறி முறைமைக்கும் எதிராக போராடியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டார் என்றும், பின்னர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகி நாட்டின் மாற்றத்திற்கு தலைமை தாங்கினார் என்றும் சுட்டிக்காட்டிய நஜித் இந்திக, ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிப் பதிவுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த அந்தத் தலைவருக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

Latest News
அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி
Local
14 September 2026
தேசிய மக்கள் சக்தியின் தொடர் பேரணிகளுக்கான காரணம் என்ன? - பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்
Local
14 September 2026
செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!
Local
14 September 2026
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
Local
14 September 2026
எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!
Local
14 September 2026
இன்று இரவு வெளியாகிறது iOS 27 : எந்தெந்த iPhone மொடல்களுக்கு கிடைக்கும்?
Local
14 September 2026
ரூ.10 மில்லியன் அரச நிதி எங்கே? - ஷிரந்தி ராஜபக்ஷவைச் சுற்றும் விசாரணை வளையம்
Local
14 September 2026
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
Local
14 September 2026
601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!
Local
14 September 2026
தியாகத்தின் அடையாளம் வேறு, ஊழல் குற்றச்சாட்டு வேறு : மண்டேலாவுடன் நாமலை ஒப்பிடுவது பொருத்தமானதா ? - நஜித் இந்திக கேள்வி
Local
14 September 2026