Entertainment15 July 2026

'AK64' படத்தை அஜித் தானே தயாரிக்கின்றாரா? – ஷாலினி அஜித் குறித்த புதிய தகவல்!

நடிகர் அஜித் குமார் தனது அடுத்த திரைப்படமான 'AK64' படத்தை தானே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் திரைத்துறை தரப்புக்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளை, அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித் குமார் முன்னின்று ஒருங்கிணைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, திரைப்படத்தின் தொடக்க டைட்டில் கார்டில் "ஷாலினி அஜித் குமார் வழங்கும்" என்ற வாசகம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், 'AK64' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அல்லது தயாரிப்பாளர் தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes