இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதியரின் மகளின் திருமணம் கடந்த ஜூன் 25-ஆம் திகதி கோவாவில் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், திருமணத்திற்காகப் பிரதமர் மோடியைக் குஷ்புவின் குடும்பத்தினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியது குறித்து நடிகை குஷ்பு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
"பிரதமர் மோடி எங்களிடம் ஒரு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே பேசுவார் என நினைத்தோம். ஆனால், அந்தச் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. எனது கணவர் சுந்தர் சி, எனது மகள் அவந்திகா மற்றும் மருமகன் ஷ்ரவன் ஆகியோரிடம் பிரதமர் மோடி முதலில் 'உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?' என்றுதான் கேட்டார். ஷ்ரவன் கொஞ்சம் தடுமாறி இந்தியில் பேசினார்; சுந்தர் சிக்கு ஹிந்தி தெரியவில்லை.
'தமிழ்நாட்டில் ஹிந்தி வேண்டாம் என்று சொன்னதால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்; தெரியாமல் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்' என்று சுந்தர் சி பிரதமர் மோடியிடம் கூறினார்.
உடனே, 'என்னைப் பார்த்தாவது நீங்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கலாமே?' எனப் பிரதமர் என்னிடம் கேட்க, '30 வருடங்களாக முயற்சித்தும் முடியவில்லை' எனக் கூறினேன்.
எனது மகளுக்கு ஹிந்தி தெரியும்; பள்ளியில் அவளது இரண்டாவது மொழி இந்திதான். அதை அவள் பிரதமரிடம் கூறியதும், 'மிகவும் நன்று. நீங்கள் உங்கள் அப்பாவுக்கும் கணவருக்கும் ஹிந்தி சொல்லிக் கொடுங்கள்' என்று கூறிய பிரதமர், கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்றும் மணமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்" என அந்தச் சந்திப்பில் நடந்தவை குறித்துக் குஷ்பு விவரித்துள்ளார்.
Latest News
சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு!
Local
01 August 2026
அமெரிக்க கடற்படை போர் வானூர்தி விபத்து: வானூர்தி ஓட்டுநர் உயிர்தப்பினார்
Local
01 August 2026
களனி கங்கை ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை
Local
01 August 2026
ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றும் வரை அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
01 August 2026
கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
Local
01 August 2026
தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
01 August 2026
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை
Local
01 August 2026
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!
Local
01 August 2026
ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது
Local
01 August 2026
நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!
Local
01 August 2026