நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தொடர்பான விவாகரத்து வழக்கு தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நிலையில், ஜீவனாம்சம் தொடர்பாக வெளியான தகவல்களுக்கு ஆர்த்தியின் தாயார் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில், ஆர்த்தி மாதந்தோறும் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சம் கோரியதாக தகவல்கள் பரவிய நிலையில், அது தவறான புரிதல் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி ஆர்த்திக்கு மாதம் ரூ.3 இலட்சமும், தம்பதியரின் இரண்டு மகன்களுக்கும் தலா ரூ.1 இலட்சம் வீதம் மாதந்தோறும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, மொத்தம் மாதம் ரூ.5 இலட்சம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், அமெரிக்க பாடத்திட்டத்தில் கல்வி கற்கும் இரண்டு மகன்களின் ஆண்டு பாடசாலை கட்டணமாக சுமார் ரூ.86 இலட்சம் செலவாகும் என்றும், அந்தக் கட்டணத்தையும் ரவி மோகன் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதுமட்டுமன்றி, குழந்தைகளின் கராத்தே, சதுரங்கம், நடனம் உள்ளிட்ட இணைப் பாடத்திட்ட (Extracurricular) பயிற்சிகளுக்கான செலவுகளையும் ரவி மோகன் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அனைத்து செலவுகளையும் சேர்த்தே ரூ.40 இலட்சம் என்ற தொகை குறிப்பிடப்பட்டதாகவும், அது மாதாந்திர ஜீவனாம்ச கோரிக்கையாக அல்ல என்றும் ஆர்த்தியின் தாயார் விளக்கம் அளித்துள்ளார்.
Latest News
கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
Local
04 August 2026
அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; ஒருவர் காணாமல்போயுள்ளார்
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
ஹட்டன் - கினிகத்தேனை வீதி வழமைக்கு
Local
04 August 2026
இலங்கையின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு!
Local
04 August 2026
கொழும்பு - கண்டி பிரதான வீதி மீண்டும் வழமைக்கு
Local
04 August 2026
காவல்துறை மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து - சிக்கலில் சாகர காரியவசம்!
Local
04 August 2026
கொட்டித் தீர்க்கப்போகும் பலத்த மழை - இன்றைய வானிலை அறிக்கை
Local
04 August 2026
ஈரானுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே 'கடைசி வாய்ப்பு' : எச்சரிக்கிறார் ட்ரம்ப் !
Local
04 August 2026
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்!
Local
04 August 2026