நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு அவரது தனிப்பட்ட உறவு தொடர்பானதாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.
இதனிடையே, அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், தனது முந்தைய உறவு குறித்து பெயரைக் குறிப்பிடாமல் அனுபமா பரமேஸ்வரன் மனம் திறந்து பேசியிருந்தார்.
தனது பழைய உறவில் சுமார் இரண்டு ஆண்டுகள் மன ரீதியான துன்பங்களை எதிர்கொண்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு, தனது உடல் எடை கணிசமாகக் குறைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலி மற்றும் உணர்வுப்பூர்வமான போராட்டங்கள் இருந்ததாகவும், முழுமையாகக் குணமடைந்த பின்னரே அது குறித்து பேச விரும்பியதாகவும் கூறியிருந்தார்.
இந்த நேர்காணல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், நடிகர் நிவின் பாலி பெண்கள் குறித்து பேசிய பழைய காணொளி ஒன்றை அனுபமா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன், “நிவின் பாலி 12 ஆண்டுகளுக்கு முன்பே இதை என்னிடம் கூறினார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில் பேசிய நிவின் பாலி, பெண்கள் வீட்டிலும், கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெண்கள் தங்களது ஆசைகள் மற்றும் கனவுகளை நோக்கி தைரியமாக முன்னேற வேண்டும் என்றும், தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன், 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் அவர் நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி!
Local
16 August 2026
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!
Local
15 August 2026
மலையக ஆலயங்களைப் பதிவு செய்ய உடனடி நடவடிக்கை! – சுந்தரலிங்கம் பிரதீப் விசேட கோரிக்கை.
Local
15 August 2026
கல்கிசையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
Local
15 August 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் இந்து கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை!" – சுந்தரலிங்கம் பிரதீப் தகவல்.
Local
15 August 2026
சந்திப்புக் காணொளிகளை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதில்!
Local
15 August 2026
மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.
Local
15 August 2026
இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்
Local
15 August 2026
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!
Local
15 August 2026
வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !
Local
15 August 2026