திரைத்துறையிலிருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், பெயரைக் குறிப்பிடாமல் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
‘காற்றின் மொழி’, ‘பேச்சுலர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.
தற்போது சினிமாவிலிருந்து விலகியுள்ள அவர், ரிஷிகேஷில் தொழில் முனைவோராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில், இசையமைப்பாளர் ஒருவர் தமக்கு அத்துமீறல் தொடர்பான துன்புறுத்தலை மேற்கொண்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும், அந்த நேரத்தில் குறித்த இசையமைப்பாளரின் பெயரை அவர் வெளியிடவில்லை.
அந்த சம்பவத்துக்குப் பின்னரே சென்னையில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக திரைத்துறையிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த இசையமைப்பாளரை மீண்டும் குறிப்பிடும் வகையில் ஸ்வாகதா பரபரப்பான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
பல பெண்களுக்கு அத்துமீறல் மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அவர்களின் கண்ணியத்தையும் பணத்தையும் பறித்து, மிரட்டல் மற்றும் பிளாக்மெயில் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சமூக வலைத்தளங்கள், சமூகத்தின் மனநிலை மற்றும் பி.ஆர். நடைமுறைகள் குறித்து நேர்காணல்களில் பேசி வரும் அந்த இசையமைப்பாளர், ஆன்மிக திரைப்படம் ஒன்றுக்கு இசையமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்த இசையமைப்பாளரை மேடைக்கு அழைத்து இரண்டு பெண்கள் கேக் ஊட்டி வரவேற்ற சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்வாகதா, இதுபோன்ற செயல்களுக்கு சினிமாத்துறையே ஆதரவளிப்பதாக விமர்சித்துள்ளார்.
எனினும், தனது பதிவில் அவர் குற்றம்சாட்டும் இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடவில்லை.
இதையடுத்து, ஸ்வாகதா குறிப்பிடுவது யார் அந்த இசையமைப்பாளர்? என ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஸ்வாகதாவின் இந்த புதிய பதிவு தற்போது திரையுலகிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
Latest News
இதயத்தில் சிக்கிய துணி தைக்கும் ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!
Local
15 September 2026
ஸாம்ஃபியாவில் வரலாற்று சாதனை படைத்த ஆப்பிரிக்க காட்டு நாய்கள்: 4,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து சாதனை!
Local
15 September 2026
இலங்கையில் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த 'பெட்மேன்' தருணம்: இணையத்தில் வைரலாகும் காணொளி
Local
15 September 2026
'களுபோவில அவிஷ்க'வின் சகா ரூ. 2 கோடி போதைப்பொருட்களுடன் கைது!
Local
15 September 2026
அபிவிருத்தி என்பது தொண்டு அல்ல, அது அடிப்படை மனித உரிமை: ஐநாவில் வலியுறுத்திய இலங்கை
Local
15 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: ஈரானின் கூற்றை மறுத்தது அமெரிக்கா
Local
15 September 2026
இந்திய வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு அபராதம் விதிப்பு!
Local
15 September 2026
வானூர்தி பயணத்தின்போது ருமேஷ் தரங்கவின் நான்கு ஈட்டிகள் சேதம்: வானூர்தி நிலையத்தில் முறைப்பாடு
Local
15 September 2026
பணம் பறிக்கும் போலி ஊடகச் செயற்பாட்டாளர்கள்: ஜகத் விதான குற்றச்சாட்டு!
Local
15 September 2026
செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு: சீனாவின் எச்சரிக்கையும் அமெரிக்காவுடனான போட்டியும்!
Local
15 September 2026