Sports09 August 2026

பங்களாதேஷை பதறவைத்த 22 வயது இளம் புயல் - 54 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி குறித்த தொடருக்கு முன்னதான பயிற்சிப் போட்டியில், பங்களாதேஷ் அணி 54 ஓட்டங்களுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.

கிரிக்கெட் அவுஸ்திரேலியா XI அணிக்கு எதிரான 3 நாட்கள் கொண்ட இந்த பயிற்சிப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில், இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கெம்ப்பெல் தொம்சனின் அதிரடி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பங்களாதேஷ் அணி திணறியது.

வெறும் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய தொம்சன், பங்களாதேஷ் அணியை 17 ஓவர்களில் சுருட்டினார்.

ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 92 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த பங்களாதேஷ் அணியில், தன்சித் ஹசன் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை (22) பெற்றார்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் அணிக்கு, இந்தத் தோல்வி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes