இந்திய அணியின் இளம் அதிரடி துடுப்பாட்டக்காரர் வைபவ் சூர்யவன்சியின் (Vaibhav Sooryavanshi) உண்மையான வயது குறித்த சந்தேகங்கள் இந்தியாவிற்கு வெளியே இன்னமும் நீடிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ (Brett Lee) தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவரது வயது முக்கியமல்ல என்றும், அவரது திறமையே முதன்மையானது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
அந்த நாட்டுத் தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தனது கருத்துக்களைத் தெரிவித்த பிரெட் லீ, "இந்தியாவிற்கு வெளியே உள்ள பலரும் 'அவருக்கு உண்மையில் 15 வயதுதானா?' என்று என்னிடம் கேட்கிறார்கள். உலகளவில் தற்போது இதுவே பெரிய விவாதப் பொருளாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"அவருக்கு 15 வயதாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி. ஒருவேளை 17 அல்லது 18 வயதாக இருந்தாலும் அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? அந்தச் சிறுவனால் மிகச் சிறப்பாகக் கிரிக்கெட் விளையாட முடிகிறது, அதுவே முக்கியமானது" என்று பிரெட் லீ கூறியுள்ளார்.
அத்துடன், வைபவ் சூர்யவன்சி இந்திய கிரிக்கெட்டிற்குக் கிடைத்த மிகச்சிறந்த திறமைசாலி என்றும், அவர் மீது தேவையற்ற அழுத்தங்களைச் சுமத்தாமல், இயல்பாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026