ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து தமது நிலைப்பாட்டை பாகிஸ்தான் அணியின் வீராங்கனை வெளிப்படுத்தியுள்ளார்.
மகளிர் ஆசிய கிண்ணம் 2026 கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டி, வழக்கமான மற்றுமொரு ஆட்டமே என்று பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஆயிஷா ஜாபர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் என்றாலே அதிக எதிர்பார்ப்புகளும் அழுத்தங்களும் இருக்கும் என்றாலும், தங்களை பொறுத்தவரை இது மற்றுமொரு சாதாரண ஆட்டமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் , பாகிஸ்தான் அணி ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்தி வருவதாகவும், தாய்லாந்துக்கு எதிரான வெற்றிகரமான ஆட்டத்தை தொடர்ந்து இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
பாகிஸ்தான் அணி தனது மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும் அடுத்த அணி என்ற நிலையில் உள்ளது.
இந்திய அணியின் வீராங்கனை தீப்தி சர்மா செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையில், சமீபகால மோதல்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அணி எப்போதும் ஒரு படி மேலே இருந்து வருவதாகவும், அந்த ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைக்க முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ணப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
08 September 2026
உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இந்த வாரம் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
Local
08 September 2026
அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு
Local
08 September 2026
நாடாளுமன்றம் வர நாமலுக்கு அனுமதி!
Local
08 September 2026
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
Local
08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!
Local
08 September 2026
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!
Local
08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
Local
08 September 2026
கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!
Local
08 September 2026
காஸாவில் இடிபாடுகளை அகற்றி, போர்க்குற்றத்தை மறைக்க முயலும் இஸ்ரேல்!
Local
08 September 2026